அரசு பஸ் கண்ணாடியை உடைத்தவர் கைது
அரசு பஸ் கண்ணாடியை உடைத்தவர் கைது செய்யப்பட்டார்.
கரூர்
கரூரில் இருந்து ஈரோடு நோக்கி நேற்று முன்தினம் அரசு பஸ் ஒன்று புறப்பட்டது. அந்த பஸ்சில் பயணம் செய்த வாலிபர் ஒருவர் சக பயணிகளிடம் தகராறு செய்துள்ளார். இதையடுத்து பயணிகள் அந்த வாலிபரை பஸ்சில் இருந்து இறக்கி விடுமாறு கூறினர். இதனால் டிரைவர் மற்றும் கண்டக்டர் அந்த வாலிபரை கீழே இறக்கி விட்டனர். இதனால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர் சாலையில் கிடந்த கல்லை எடுத்து பஸ்சின் பின்பக்க கண்ணாடியில் எறிந்ததால் கண்ணாடி உடைந்தது. இதுகுறித்து கண்டக்டர் சேகரன் கரூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அந்த வாலிபர் தர்மபுரி மாவட்டம் கிராப்பட்டியை சேர்ந்த திருமலை (வயது 29) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story