டெம்போவில் கடத்திய 200 கிலோ கஞ்சா பறிமுதல்


பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவை, போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் பார்வையிட்டதை படத்தில் காணலாம்.
x
பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவை, போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் பார்வையிட்டதை படத்தில் காணலாம்.
தினத்தந்தி 28 Feb 2021 1:26 AM IST (Updated: 28 Feb 2021 1:26 AM IST)
t-max-icont-min-icon

அருமனை அருகே டெம்போவில் கடத்திய 200 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

அருமனை, 
அருமனை அருகே டெம்போவில் கடத்திய 200 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ரகசிய தகவல்
அருமனை அருகே அண்டுகோடு மயிலச்சிவிளை என்ற இடத்தில் மர்மமான முறையில் ஒரு டெம்போவை நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உத்தரவின்பேரில் தக்கலை உட்கோட்ட தனிப்பிரிவு போலீசார் மற்றும் அருமனை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று டெம்போவை சோதனையிட்டனர்.
அப்போது டெம்போவில் 90 பாக்கெட்டுகளில் சுமார் 200 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.50 லட்சம் என கூறப்படுகிறது.
பறிமுதல்
தொடர்ந்து டெம்போவுடன் கஞ்சாவை பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். மேலும், இந்த கஞ்சாவை கேரளாவில் இருந்து தமிழக பகுதிக்கு கடத்தி கொண்டு வந்தார்களா? கடத்தி வந்த மர்ம நபர்கள் யார்? எங்கு கொண்டு செல்வதற்காக கடத்தி வரப்பட்டது? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 
கடத்திவரப்பட்ட கஞ்சாவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் பார்வையிட்டு மேல்விசாரணை நடத்தினார். 

Next Story