மோட்டார் சைக்கிள்கள் திருடிய 2 பேர் கைது


மோட்டார் சைக்கிள்கள் திருடிய 2 பேர் கைது
x
தினத்தந்தி 27 Feb 2021 9:40 PM GMT (Updated: 27 Feb 2021 9:40 PM GMT)

திருக்காட்டுப்பள்ளி பகுதியில் மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 7 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.

திருக்காட்டுப்பள்ளி;
திருக்காட்டுப்பள்ளி பகுதியில் மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 7 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர். 
மோட்டார் சைக்கிள் திருட்டு
தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள குழிமாத்தூர்குடியான தெருவை  சேர்ந்தவர் சதீஷ்கண்ணன்(வயது30). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பூண்டி மாதா கோவில் சாலையில் உள்ள திருமண மண்டபத்துக்கு தனது மோட்டார் சைக்கிளில் வந்தார். இந்த மோட்டார் சைக்கிள் திருட்டு போனது. இதுகுறித்து சதீஷ் கண்ணன் திருக்காட்டுப்பள்ளி போலீசில் புகார் செய்தார். 
2 பேர் கைது
இதன்பேரில் திருக்காட்டுப்பள்ளி போலீசார்   அந்த பகுதியில் அமைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். இதன்பேரில் கும்பகோணம் அருகே உள்ள தாராசுரம் வலையபேட்டை பகுதியை சேர்ந்த கார்த்திக்(20), திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள கிளியநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த நாகராஜ்(25) ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள்  இருவரும் சேர்ந்து இந்த பகுதியில் 7 மோட்டார் சைக்கிள்களை திருடியது தெரியவந்தது. கார்த்திக், நாகராஜ் ஆகியோரிடம் இருந்து 7 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்த போலீசார் இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறர்கள்.

Next Story