நெல்லையில் வருவாய் கிராம ஊழியர்கள் உண்ணாவிரதம்
நெல்லையில் வருவாய் கிராம ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை:
நெல்லை வண்ணார்பேட்டையில் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முருகையா தலைமை தாங்கி, உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்து பேசினார்.
வருவாய் கிராம ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். புதிய ஓய்வூதியத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதியத்தை செயல்படுத்த வேண்டும். இயற்கை இடர்பாடுகள் காலங்களில் சிறப்பு படி வழங்க வேண்டும். கிராம உதவியாளர்கள் ஓய்வுபெறும்போது கடைசியாக பெறும் ஊதியத்தில் 50 சதவீதத்தை ஓய்வூதியமாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இதில் வருவாய் கிராம ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story