கழுதைப்பால் விற்பனை ஜோர்


கழுதைப்பால் விற்பனை ஜோர்
x
தினத்தந்தி 28 Feb 2021 9:13 PM IST (Updated: 28 Feb 2021 9:13 PM IST)
t-max-icont-min-icon

திருப்பூரில்கழுதைப்பால் விற்பனை ஜோர்

திருப்பூர்,
குழந்தைகளுக்கு சளி மற்றும் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டால் பலரும் கழுதைப்பால் கொடுப்பது வழக்கம். இதுபோல் இந்த கழுதைப்பாலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருப்பதால், குழந்தைகளுக்கு இதனை கொடுக்க பெற்றோர்கள் அதிக ஆர்வமாக இருப்பார்கள். 
அந்த வகையில் திருப்பூர் பல்லடம் ரோடு உள்பட பகுதியில் ஈரோட்டை சேர்ந்த சிலர் கழுதைகளை கொண்டு வந்து கழுதைப்பால் விற்பனையில் ஈடுபட்டனர். இதில் ஒரு சங்கு பால் ரூ.50-க்கு விற்பனை செய்யப்பட்டது. இருப்பினும் இந்த பாலை பெற்றோர்கள் பலர் வாங்கி குழந்தைகளுக்கு கொடுத்தனர். இந்த விற்பனையும் நேற்று ஜோராக நடந்தது. 

Next Story