மாடு முட்டியதில் 20 பேர் காயம்


மாடு முட்டியதில் 20 பேர் காயம்
x
தினத்தந்தி 28 Feb 2021 5:01 PM GMT (Updated: 28 Feb 2021 5:01 PM GMT)

சிவகங்கை அருகே நடைபெற்ற மஞ்சுவிரட்டில் மாடுகள் முட்டியதில் 20 பேர் காயம் அடைந்தனர்.

சிவகங்கை,

சிவகங்கை அருகே நடைபெற்ற மஞ்சுவிரட்டில் மாடுகள் முட்டியதில் 20 பேர் காயம் அடைந்தனர்.

மஞ்சுவிரட்டு

சிவகங்கையை அடுத்த டி.புதூர் கிராமத்தில் உள்ள சோனையாஅய்யனார் தர்மமுனீஸ்வரர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசி மாத திருவிழாவையொட்டி மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடைபெறும். அது போல் இந்த ஆண்டு திருவிழாவையொட்டி மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதையொட்டி அங்குள்ள மஞ்சுவிரட்டு பொட்டலில் உள்ள தொழுவத்தில் இருந்து மதியம் 12.45 மணிக்கு ஒன்றன்பின் ஒன்றாக மாடுகள் அவிழ்த்துவிடப்பட்டன. மொத்தம் 280 மாடுகள் தொழுவத்தில் இருந்து அவிழ்த்து விடப்பட்டன. 44 மாடுபிடிவீரா்கள் மாடுகளை பிடிக்க முயன்றனர். 

20 பேர் காயம்

தொழுவத்தில் இருந்து சீறிப்பாய்ந்த காளைகள் மாடுபிடி வீரா்களை முட்டி தள்ளிகொண்டு கூட்டத்தில் பாய்ந்து சென்றன. மாடுகள் முட்டியதில் 20 பேர் காயம் அடைந்தனர்.அவர்களுக்கு அங்கிருந்த மருத்துவ குழுவினர் முதலுதவி சிகிச்சை அளித்து அனுப்பினர். இது தவிர 150 மாடுகள் தொழுவத்திற்கு வெளியில் இருந்துவிடப்பட்டது.
கூட்டத்தில் இருந்து சீறிப்பாய்ந்த காளை ஒன்று அந்த வழியில் மோட்டார் சைக்கிளில் சென்ற சிவகங்கை எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த ஜோசப் (வயது62) என்பவரின் கழுத்தில் குத்தியது.இதில் பலத்த காயம் அடைந்த அவரை சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

Next Story