மாவட்ட செய்திகள்

பள்ளி மாணவியை கடத்தி கட்டாய திருமணம் + "||" + Schoolgirl kidnapped and forced married

பள்ளி மாணவியை கடத்தி கட்டாய திருமணம்

பள்ளி மாணவியை கடத்தி கட்டாய திருமணம்
செஞ்சி அருகே பள்ளி மாணவியை கடத்தி கட்டாய திருமணம் செய்த வாலிபைர போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.
செஞ்சி, 

செஞ்சி அருகே உள்ள சத்தியமங்கலத்தை சேர்ந்தவர் கோதண்டம். இவரது மகன் சூர்யா( வயது 20). இவர், அதே பகுதியை சேர்ந்த 16 வயதான பிளஸ்-1 மாணவியை காதலித்து வந்தார். இந்த நிலையில் சூர்யா, அந்த மாணவியை கடத்திச்சென்று அதே ஊரில் உள்ள ஒரு கோவிலில் வைத்து கட்டாய திருமணம் செய்து கொண்டார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் செஞ்சி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சூர்யாவை கைது செய்தனர்.