உளுந்தூர்பேட்டை அருகே கூரை வீடு எரிந்து நாசம்
உளுந்தூர்பேட்டை அருகே கூரை வீடு எரிந்து நாசம்
உளுந்தூர்பேட்டை
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஈஸ்வரன் கண்ட நல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கலியமூர்த்தி மகன் பத்ராசலம்(வயது 31). வெல்டிங் தொழிலாளியான இவரது கூரை வீடு நேற்று மதியம் திடீரென தீப்பிடித்து எரிந்தது.
இதுபற்றிய தகவலறிந்து திருநாவலூர் தீயணைப்பு நிலைய அதிகாரி சுந்தரேஸ்வரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து போராடி தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் வீடு முழுவதும் எரிந்து சாம்பல் ஆனது. இது குறித்து திருநாவலூர் போலீசார் நடத்திய விசாரணையில் மின் கசிவு காரணமாக தீ விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
Related Tags :
Next Story