வடகாடு பகுதியில் பலா மூசு விற்பனை மும்முரம்
வடகாடு பகுதியில் பலா மூசு விற்பனை மும்முரம்
வடகாடு:
வடகாடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் மூலம் பராமரிக்கப்பட்ட பலா மூசு விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது. கஜா புயலுக்கு பின்னர் கடந்த ஆண்டு தான் துளிர் விட்டு துளிர்த்து வரத்துவங்கிய பலாமரங்கள் நல்ல முறையில் விளைச்சல் கண்டும், கொரோனா பெருந்தொற்று காரணமாக விதிக்கப்பட்ட பொதுத்தடையால் பலாப்பழங்களை வாங்குவோர் இன்றி மரங்களிலேயே பழுத்து வீணாகி வந்தது. அதன் பிறகு தற்போது, வரை பலாப்பழங்களுக்கு உரிய விலை இல்லாமல் இருந்து வருகிறது. மேலும் இப்பகுதிகளில் தொடர்ந்து பெய்து வந்த தொடர் மழையால் தங்களது வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்ட விவசாயிகள் வேறு வழியின்றி தங்களிடம் இருந்த பலா மரங்களை ஒத்திகை மற்றும் குத்தகைக்கு வியாபாரிகளிடம் கொடுத்துள்ளனர். இதனால் தங்களிடம் எஞ்சியுள்ள ஒருசில பலா மரங்களையும் பேணி பராமரிப்பு செய்து வரும் விவசாயிகள் தற்போது, பலா மரங்களில் அதிகப்படியான அளவில் உற்பத்தி ஆகிய பலா மூசுகளை கமிஷன் கடைகளில் விற்பனைக்கு கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர். அதுவும் உரிய விலை கிடைக்க வில்லை என்றும் விவசாயிகள் கூறுகின்றனர். மேலும் இதுகுறித்து அவர்கள் கூறுகையில் பங்குனி, சித்திரை, வைகாசி போன்ற மாதங்களில் பலா பழங்களின் தேவை மற்றும் சீசன் ஆரம்பமாகும் என்றும் தெரிவித்தனர். இந்த ஆண்டாவது உரிய விலை கிடைக்குமா? என்று தெரியவில்லை என்றும் கவலையுடன் கூறுகின்றனர்.
Related Tags :
Next Story