இன்று மகளிர் தினத்தை முன்னிட்டு மாமல்லபுரம் புராதன சின்னங்களை காண பெண்களுக்கு இலவச அனுமதி; தொல்லியல் துறை அறிவிப்பு


இன்று மகளிர் தினத்தை முன்னிட்டு மாமல்லபுரம் புராதன சின்னங்களை காண பெண்களுக்கு இலவச அனுமதி; தொல்லியல் துறை அறிவிப்பு
x
தினத்தந்தி 8 March 2021 2:11 AM GMT (Updated: 8 March 2021 2:11 AM GMT)

மாமல்லபுரம் புராதன சின்னங்களை காண பெண்களுக்கு இலவச அனுமதி, எந்த வித கட்டண இன்றி பெண்கள் மட்டும் இலவசமாக கண்டுகளிக்கலாம்.

மாமல்லபுரம்,

உலக மகளிர் தினம் இன்று (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மாமல்லபுரத்தில் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள கடற்கரை கோவில், ஐந்துரதம், அர்ச்சுனன் தபசு உள்ளிட்ட புராதன சின்னங்களை இன்று ஒரு நாள் முழுவதும் பார்வையாளர் நேரமான காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை எந்த வித கட்டண இன்றி பெண்கள் மட்டும் இலவசமாக கண்டுகளிக்கலாம்.

இந்த தகவலை மாமல்லபுரம் தொல்லியல் துறை அலுவலர் சரவணன் தெரிவித்துள்ளார்.


Next Story