போலீஸ் நிலையங்களில் துப்பாக்கிகள் ஒப்படைப்பு


போலீஸ் நிலையங்களில் துப்பாக்கிகள் ஒப்படைப்பு
x
தினத்தந்தி 8 March 2021 8:18 PM GMT (Updated: 8 March 2021 8:18 PM GMT)

மாவட்டங்களில் போலீஸ் நிலையங்களில் துப்பாக்கிகள் ஒப்படைக்கப்பட்டது.

பெரம்பலூர்:
தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. இதனால் உரிமம் பெற்று துப்பாக்கி வைத்திருப்பவர்கள், தேர்தல் விதிமுறை அமலில் உள்ள வரை துப்பாக்கிகளை அவரது எல்லைக்கு உட்பட்ட போலீஸ் நிலையங்களில் ஒப்படைக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் தனிநபர் உரிமம் பெற்று துப்பாக்கிகள் வைத்திருந்த 94 பேரும், அவர்களுக்கு எல்லைக்கு  உட்பட்ட போலீஸ் நிலையத்தில் தங்களது துப்பாக்கிகளை ஒப்படைத்தனர்.
இதேபோல் அரியலூர் மாவட்டத்தில் தனிநபர் உரிமம் பெற்று துப்பாக்கிகள் வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை மொத்தம் 195 ஆகும். அதில் 156 துப்பாக்கிகள் போலீஸ் நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டது. மீதமுள்ள 39 துப்பாக்கிகள் விதி விலக்குப் பட்டியல் உள்ள விதியின் கீழ் உள்ளதால் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

Next Story