சிதம்பரத்தில் கண்களில் கருப்பு துணி கட்டி மருத்துவ கல்லூரி மாணவர்கள் போராட்டம்

சிதம்பரத்தில் கண்களில் கருப்பு துணி கட்டி மருத்துவ கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அண்ணாமலை நகர், மார்ச்.10-
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவ கல்லூரியில் நடப்பாண்டு முதல் குறைக்கப்பட்ட கல்வி கட்டணத்தை பெற வலியுறுத்தி மாணவ, மாணவிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதில், தினசரி மாலையில் கல்லூரியில் அறவழிபோராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அந்த வகையில் நேற்று மாலை 12-வது நாளாக மாணவ, மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கண்களில் கருப்பு துணி கட்டினர்
அப்போது அவர்கள் கண்களை கருப்பு துணியால் கட்டிக்கொண்டு தங்களது எதிாப்புகளை பதிவு செய்தனர். அப்போது குறைக்கப்பட்ட கல்வி கட்டணத்தை நடப்பு ஆண்டிலேயே பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். சிறிது நேரம் போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள், பின்னர் அமைதியாக கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story