மின்னணு எந்திரம் மூலம் மாதிரி வாக்குப்பதிவு


மின்னணு எந்திரம் மூலம் மாதிரி வாக்குப்பதிவு
x
தினத்தந்தி 9 March 2021 6:54 PM GMT (Updated: 9 March 2021 6:54 PM GMT)

சோளிங்கரில் மின்னணு எந்திரம் மூலம் மாதிரி வாக்குப்பதிவு செய்து காண்பிக்கப்பட்டது.

சோளிங்கர்

சோளிங்கரில் மின்னணு எந்திரம் மூலம் மாதிரி வாக்குப்பதிவு செய்து காண்பிக்கப்பட்டது.

தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் கிளாட்ஸ்ட்ன் புஷ்பராஜ் உத்தரவின் பேரில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் தேர்தலில் 100 சதவீதம் வாக்காளர்கள் வாக்குப்பதிவு செய்ய வேண்டும் என்பதற்காக நகராட்சி, பேரூராட்சி, குக்கிராமங்களில் வாக்குப்பதிவு எந்திரங்கள் மூலம் மாதிரி வாக்குப்பதிவு செயல்விளக்கம் செய்து காண்பித்து அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

இதேபோல சோளிங்கர் பேரூராட்சியில் பேரூராட்சி செயல் அலுவலர் செண்பகராஜன் தலைமையில், துப்புரவு ஆய்வாளர் வடிவேல் முன்னிலையில் 100 சதவீதம்  வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பஸ் நிலையம் மற்றும் பேரூராட்சி அலுவலக வளாகம் ஆகிய இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் மூலம் செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

Next Story