இளம்பெண் தீக்குளித்து தற்கொலை


இளம்பெண் தீக்குளித்து தற்கொலை
x
தினத்தந்தி 28 March 2021 7:38 PM GMT (Updated: 28 March 2021 7:38 PM GMT)

சிவகாசியில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

சிவகாசி, 
சிவகாசி சித்துராஜபுரத்தை சேர்ந்தவர் சரவணக்குமார் மனைவி ஈஸ்வரி (வயது 27). இவருக்கும் இவரது கணவன் சரவணக்குமாருக்கும் குடும்ப தகராறு ஏற்பட்டு கடந்த சில மாதங்களாக ஈஸ்வரி தனது தாயுடன் வசித்து வந்துள்ளார். இந்தநிலையில் கணவன், குழந்தைகளை பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் மனமுடைந்து வீட்டில் யாரும் இல்லாத போது மண்எண்ணெய் ஊற்றி  தீ வைத்துக்கொண்டார். இதில் உடல் முழுவதும் பலத்த தீக்காயம் அடைந்தவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு ஈஸ்வரியை பரிசோதனை செய்து பார்த்த டாக்டர், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார். இந்த சம்பவம் குறித்து ஈஸ்வரியின் தங்கை மல்லிகா சிவகாசி டவுன் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story