ஊட்டி தொகுதி தேர்தல் பொது பார்வையாளர் ஆய்வு


ஊட்டி தொகுதி தேர்தல் பொது பார்வையாளர் ஆய்வு
x
தினத்தந்தி 29 March 2021 1:38 AM GMT (Updated: 29 March 2021 2:03 AM GMT)

ஊட்டி தொகுதி தேர்தல் பொது பார்வையாளர் பனுதர் பெஹரா பதற்றமான வாக்குச்சாவடிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஊட்டி,

ஊட்டி சட்டமன்ற தொகுதியில் 308 வாக்குச்சாவடிகள் உள்ளது. வருகிற 6-ந் தேதி நடைபெற உள்ள வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது. இதற்கிடையே ஊட்டி தொகுதியில் 32 வாக்குசாவடிகள் பதற்றமான வாக்குச்சாவடிகளாக கண்டறியப்பட்டு உள்ளது. 

இந்த நிலையில் ஊட்டி தொகுதி தேர்தல் பொது பார்வையாளர் பனுதர் பெஹரா பதற்றமான வாக்குச்சாவடிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆனைக்கட்டி, சிறியூர், சிங்காரா, மாயார் ஆகிய பதற்றமான வாக்குச்சாவடிகளில் அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் வாகன சோதனைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டார். 

மேலும் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யுமாறு அறிவுறுத்தினார். தொடர்ந்து அவர் ஊட்டி-மசினகுடி சாலையில் சிறப்பு அதிரடி படையினர் வாகன சோதனை நடத்துவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் தேர்தல் கட்டுப்பாட்டு அறையின் செயல்பாடுகளை ஆய்வு மேற்கொண்டார்.

Next Story