பெருந்துறை வாரச்சந்தையில் ரூ.20 லட்சத்துக்கு ஆடுகள் விற்பனை


பெருந்துறை வாரச்சந்தையில்  ரூ.20 லட்சத்துக்கு ஆடுகள் விற்பனை
x
தினத்தந்தி 29 March 2021 10:13 PM GMT (Updated: 29 March 2021 10:13 PM GMT)

ரூ.20 லட்சத்துக்கு ஆடுகள் விற்பனையானது.

ரூ.20 லட்சத்துக்கு ஆடுகள் விற்பனையானது.
ஆடுகள்
பெருந்துறை வாரச்சந்தையில் ஆடுகள் விற்பனை நடைபெற்றது. இந்த சந்தைக்கு திருப்பூர் மாவட்டம் கன்னிவாடியில் இருந்து 200 செம்மறி ஆடுகளும், பெருந்துறை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து 200 வெள்ளாடுகளும் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டு இருந்தன.
ரூ.20 லட்சத்துக்கு...
இதில் பெரிய வெள்ளாடு ஒன்று ரூ.7 ஆயிரம் முதல் ரூ.9 ஆயிரம் வரை விற்பனை ஆனது. சிறிய வெள்ளாடு ஒன்று ரூ.4 ஆயிரம் முதல் ரூ.6 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் பெரிய செம்மறி ஆடு ஒன்று ரூ.5 ஆயிரம் முதல் ரூ.7 ஆயிரம் வரையும், சிறிய செம்மறி ஆடு ஒன்று ரூ.3 ஆயிரம் முதல் ரூ.4 ஆயிரம் வரையும் விற்பனை ஆனது. ஆடுகள் மொத்தம் ரூ.20 லட்சத்துக்கு விற்பனை ஆனதாக சந்தை நிர்வாகிகள் தெரிவித்தனர். பெருந்துறை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து வந்த விவசாயிகள் மற்றும் ஆடுகள் வளர்ப்போர் இங்கு வந்து ஆடுகளை விலைபேசி வாங்கி சென்றனர். 

Next Story