மாவட்ட செய்திகள்

பர்கூர் மலைப்பகுதியில்வனவிலங்குகள் தாகம் தீர்க்க செயற்கை குட்டைகளில் தண்ணீர் நிரப்பப்பட்டது + "||" + water

பர்கூர் மலைப்பகுதியில்வனவிலங்குகள் தாகம் தீர்க்க செயற்கை குட்டைகளில் தண்ணீர் நிரப்பப்பட்டது

பர்கூர் மலைப்பகுதியில்வனவிலங்குகள் தாகம் தீர்க்க செயற்கை குட்டைகளில் தண்ணீர் நிரப்பப்பட்டது
பர்கூர் மலைப்பகுதியில் வனவிலங்குகளின் தாகத்தை தீர்க்க செயற்கை குட்டைகளில் தண்ணீர் நிரப்பப்பட்டது.
பர்கூர் மலைப்பகுதியில் வனவிலங்குகளின் தாகத்தை தீர்க்க செயற்கை குட்டைகளில் தண்ணீர் நிரப்பப்பட்டது.
பர்கூர் மலைப்பகுதி
அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப்பகுதியில் யானை, சிறுத்தை, காட்டெருமை, மான், கரடி, செந்நாய், முள்ளம்பன்றி உள்பட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. வன விலங்குகளின் தாகத்தை தீர்க்க வனப்பகுதியில் 10-க்கும் மேற்பட்ட செயற்கை குட்டைகள் வனத்துறையினரால் அமைக்கப்பட்டுள்ளன. வனவிலங்குகள் இங்கு காலை மற்றும் மாலை நேரங்களில் வந்து தாகம் தீர தண்ணீர் குடித்துவிட்டு செல்லும்.
அச்சம்
இந்த நிலையில் குட்டைகளில் தண்ணீர் இல்லாததாலும் கோடைகாலம் என்பதாலும் வனவிலங்குகள் தண்ணீர் தேடி அருகே உள்ள ஊருக்குள்ளும், தோட்டத்துக்குள்ளும் புகுந்து வருகின்றன. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
இதனை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். பர்கூர் வனச்சரகர் மணிகண்டன் தலைமையில் வன ஊழியர்கள் லாரிகள் மூலம் தண்ணீர் கொண்டு வந்து செயற்கை குட்டைகளில் நிரப்பி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. வைகை ஆற்றுக்கு வந்த தண்ணீர்
வைகை ஆற்றுக்கு வந்த தண்ணீர்
2. நீர் நிலைகளில் தண்ணீர் நிரப்பும் பணி தீவிரம்
வனவிலங்குகளின் தேவைக்காக வனப்பகுதியில் உள்ள நீர் நிலைகளில் தண்ணீர் நிரப்பும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
3. கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்துக்கு திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தம்
பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்துக்கு திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது.
4. தென்கரை வாய்க்காலில் கூடுதலாக தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை
தென்கரை வாய்க்காலில் கூடுதலாக தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
5. பவானிசாகர் அணையில் இருந்து பாசனத்துக்காக கீழ்பவானி வாய்க்காலில் 3-ம் சுற்று தண்ணீர் திறப்பு
பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் 3-ம் சுற்றுக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.