நானும் எனது மகனும் சம்பவ இடத்தில் இல்லாததால் எங்கள் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும்


நானும் எனது மகனும் சம்பவ இடத்தில் இல்லாததால் எங்கள் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும்
x
தினத்தந்தி 30 March 2021 2:12 AM GMT (Updated: 30 March 2021 2:12 AM GMT)

நானும், எனது மகனும் சம்பவ இடத்தில் இல்லாததால் எங்கள் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று தேர்தல் நடத்தும் அதிகாரி வைத்திநாதனிடம், பொள்ளாச்சி ஜெயராமன் சார்பில் மனு கொடுக்கப்பட்டது.

பொள்ளாச்சி

நானும், எனது மகனும் சம்பவ இடத்தில் இல்லாததால் எங்கள் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று தேர்தல் நடத்தும் அதிகாரி வைத்திநாதனிடம், பொள்ளாச்சி ஜெயராமன் சார்பில் மனு கொடுக்கப்பட்டது.

வழக்கு ரத்து

பொள்ளாச்சி தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி வைத்திநாதனிடம், அ.தி.மு.க. வேட்பாளர் பொள்ளாச்சி ஜெயராமன் சார்பில் கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கிருஷ்ணகுமார் ஒரு மனு கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:-

ஒக்கிலிபாளையத்தில் தேர்தல் பிரசாரத்தின் போது நடந்த சம்பவத்தின் போது நானும், என் மகன் பிரவீனும் அங்கு இல்லை. இது தொடர்பாக போலீசில் பொய்யாக புகார் கொடுக்கப்பட்டு உள்ளது. 

மேலும் 100 பேர் வரை சேர்ந்து மிரட்டியதால் என் மீதும், என் மகன் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. எனவே அந்த போலியான வழக்கை ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்

இதேபோன்று அ.தி.மு.க. வேட்பாளர் பொள்ளாச்சி ஜெயராமன் கொடுத்த மற்றொரு மனுவில் கூறியிருப்பதாவது:-

தி.மு.க. தேர்தல் அறிக்கையில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கள் அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

இதற்கிடையில் தி.மு.க. ஆதிதிராவிட நலக்குழு சார்பில் தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் கல்வி தகுதிக்கு ஏற்ப வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்று வேட்பாளர் வரதராஜன் பெயரில் விண்ணப்பத்தை இளைஞர்களிடம் கொடுத்து அதை பூர்த்தி செய்து வாங்குகின்றனர். 

இது தேர்தல் நடத்தை விதிமுறை மீறலாகும். எனவே தி.மு.க. வேட்பாளர் வரதராஜனை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story