தென்னை வணிக வளாகம் திறம்பட செயல்பட நடவடிக்கை; பட்டுக்கோட்டை தொகுதி த.மா.கா. வேட்பாளர் என்.ஆர்.ரெங்கராஜன் வாக்குறுதி


தென்னை வணிக வளாகம் திறம்பட செயல்பட நடவடிக்கை; பட்டுக்கோட்டை தொகுதி த.மா.கா. வேட்பாளர் என்.ஆர்.ரெங்கராஜன் வாக்குறுதி
x
தினத்தந்தி 30 March 2021 9:30 AM IST (Updated: 30 March 2021 9:32 AM IST)
t-max-icont-min-icon

தென்னை வணிக வளாகம் திறம்பட செயல்பட நடவடிக்கை எடுப்பேன் என்று பட்டுக்கோட்டை தொகுதி த.மா.கா. வேட்பாளர் என்.ஆர்.ரெங்கராஜன் பிரசாரம் செய்தார்.

என்.ஆர்.ரெங்கராஜன் பிரசாரம்
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை சட்டசபை தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணியில் த.மா.கா.வேட்பாளர் என்.ஆர்.ரெங்கராஜன் போட்டியிடுகிறார். அவர் பட்டுக்கோட்டை தொகுதியில் திறந்த ஜீப்பில் வீதி, வீதியாக சென்று வாக்கு சேகரித்து வருகிறார். அவர் செல்லும் இடங்களில் பொதுமக்கள் அவருக்கு ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.அதன்படி நேற்று அவர் பட்டுக்கோட்டை கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பொன்னவராயன்கோட்டை, உக்கடை, நியூ ஹவுசிங் யூனிட், பொன்னை காலனி, அணைக்காடு தலையாரி தெரு, அணைக்காடு ஆணை கொல்லை, சூரப்பள்ளம், செண்டாங்காடு, ஆத்திக்கோட்டை, நாட்டுச்சாலை ஆகிய கிராமங்களில் வீதி, வீதியாக சென்று வாக்கு சேகரித்தார்.

தென்னை வணிக வளாகம்
அதைத்தொடர்ந்து வெண்டாக்கோட்டை, வெண்டாக்கோட்டை தெற்கு, கள்ளிக்காடு, துவரங்குறிச்சி, தாமரங்கோட்டை, பரக்கலக்கோட்டை, கிருஷ்ணாபுரம், ஒதியடிக்காடு, தம்பிக்கோட்டை வடகாடு, தம்பிக்கோட்டை மேலக்காடு, தம்பிக்கோட்டை மறவக்காடு, தாமரன்கோட்டை தெற்கு. மஞ்சவயல். கரிசக்காடு. கருங்குளம். செங்கப்படுத்தான்காடு. ராசியன்காடு ஆகிய பகுதிகளில் திறந்த ஜீப்பில் சென்று பொதுமக்களை சந்தித்து வாக்குகள் சேகரித்தார்.

அப்போது தென்னை வணிக வளாகத்தை திறம்பட செயல்பட வைத்து தென்னை விவசாயிகளுக்கு பயன் அளிக்கும் வகையில் நிச்சயமாக உதவுவோம். கிராமப்புறங்களில் கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க நடவடிக்கை எடுப்பேன் என உறுதி அளித்தார்.

வேட்பாளருடன் பட்டுக்கோட்டை எம்.எல்.ஏ. சி.வி.சேகர், முன்னாள் எம்.எல்.ஏ. ராமச்சந்திரன், மலைஅய்யன், ஒன்றிய செயலாளர் முருகானந்தம், பா.ஜ.க. சார்பில் முரளி கணேஷ், அன்பு, அன்பரசன், த.மா.கா. சார்பில் வட்டார தலைவர்கள் பழனிவேல் வைத்திலிங்கம், பா.ம.க. சார்பில் தியாகராஜன் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Next Story