உடன்குடி கூழையன்குண்டு கல்லால் அய்யனார் கோவில் பங்குனி உத்திர திருவிழா


உடன்குடி கூழையன்குண்டு  கல்லால் அய்யனார் கோவில் பங்குனி உத்திர திருவிழா
x
தினத்தந்தி 30 March 2021 1:56 PM GMT (Updated: 30 March 2021 1:56 PM GMT)

உடன்குடி கூழையன்குண்டு கல்லால் அய்யனார் கோவில் பங்குனி உத்திர திருவிழா நடந்தது.

உடன்குடி:
உடன்குடி கூழையன்குண்டு கல்லால் அய்யனார் திருக்கோவில் பங்குனி உத்திர திருவிழா சிறப்பாக நடந்தது. இத்திருவிழாவில் மாநிலம் முழுவதும் இருந்து திரளான பக்தர்கள் குடும்பத்தினருடன் 4 நாட்கள் தங்கியிருந்து சாமி தரிசனம் செய்தனர்.
பங்குனி உத்திர திருவிழா
உடன்குடி அருகேயுள்ள கூழையன்குண்டு கிராமத்தில் பிரசித்தி பெற்ற கல்லால் அய்யனார் கோவில் உள்ளது. இக்கோவிலில் இந்தஆண்டுக்கான பங்குனி உத்திர திருவிழா கடந்த மார்ச் 27-ம் தேதி தொடங்கியது. 
இதையொட்டி அன்று மாலை 4 மணிக்கு குலசேகரன்பட்டணம் சிதம்பரேஸ்வரர் கோவில் கடற்கரையில் இருந்து கடல் தீர்த்தம் எடுத்து  வந்தனர்.
பால்குடம் ஊர்வலம்
கடந்த  மார்ச்.28-ம் தேதி காலை 5 மணிக்கு மேளதாளத்துடன் அல்லி ஊத்தில் இருந்து தீர்த்தக்குடம் கோவிலுக்கு எடுத்து வந்தனர். காலை 6 மணிக்கு மகா கணபதி ஹோமம், இடர் நீக்கும் யாகசாலை வேள்வி பூஜையும், மகாலெட்சுமி யாகமும் நடந்தது. காலை 7 மணிக்கு ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். தொடர்ந்து காலை 8 மணிக்கு மகா கணபதி, கல்லால் அய்யனார், வைத்தியலிங்க சுவாமி, முருகபெருமாள், பத்திரகாளி அம்மன், பிரம்மசக்தி அம்மன், சாஸ்தா, பிள்ளை பெருமாள், முன்னடி முருகன், முத்துப்பேச்சிஅம்மன், கருப்ப சித்தர் Iசுடலைமாடசுவாமி, காலம்மை நாடாச்சிஅம்மன் மற்றும் தெய்வங்களுக்கு மகா அபிஷேகம் நடந்தது.
திருவிளக்கு பூஜை
அன்று காலை 10 மணி, இரவு 8 மணிக்கு வில்லிசை, மதியம் 12 மணிக்கு சிறப்பு தீபாராதனையும். மாலை 5 மணிக்கு கொரோனா நீங்கி மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ ஏராளமான பெண்கள் கலந்துகொண்ட திருவிளக்கு பூஜையும் நடந்தது. இரவு 7 மணிக்கு சிவதாண்டவம் நடந்தது. இரவு 10 மணிக்கு முளைப்பாரி ஊர்வலமும்,  இரவு 12 மணிக்கு சிறப்பு தீபாராதனை, சுவாமி, அம்பாள் அனுக்கிரக பூஜை நடந்தது.
கடந்த மார்ச்.29-ம் தேதி பகல் 10 மணி, இரவு 8.30 மணிக்கு வில்லிசை, நண்பகல் 12 மணிக்கு பத்திரகாளி அம்மன் மஞ்சள் நீராடுதல், பகல் 12.30 மணிக்கு பத்திரகாளி அம்மன் பரிவார தேவதைகளுடன் அல்லி ஊத்தில் நீராடுதல், இரவு 7 மணிக்கு நகைச்சுவை பாட்டு மன்றம், இரவு 10 மணிக்கு கனியான் கூத்து, இரவு 12 மணிக்கு சுடலைமாடசுவாமிக்கு நடுஜாம பூஜையும், தொடர்ந்து சுவாமி பரிவாரங்களுடன் தில்லைவனம் சென்று வருதல் நடந்தது.
விசேஷ படைப்பு 
நேற்று அதிகாலை 2 மணிக்கு காலம்மை நாடாச்சி அம்மன் வகையறாக்கள் சிறப்பு பொங்கலிட்டு விசேஷ படைப்புகளுடன் அலங்கார பூஜையும், அதிகாலை 5 மணிக்கு சுடலைமாடசுவாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு நிறைவு பூஜையுடன் கொடைவிழா நிறைவு பெற்றது. பங்குனி உத்திர திருவிழாவையொட்டி தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் வந்து தங்கியிருந்து சாமி தரிசனம் செய்துவந்தனர்.
திருவிழாஏற்பாடுகளை கோயில் அறக்கட்டளையின் நிர்வாகிகள் மற்றும் விழா குமுவினர் சிறப்பாக செய்து இருந்தனர்.


Next Story