அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அமைத்து கொடுப்பேன் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு அளிக்குமாறு அ.தி.மு.க. வேட்பாளர் ஆர்.கே.ரவிச்சந்திரன் பேச்சு


அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அமைத்து கொடுப்பேன் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு அளிக்குமாறு அ.தி.மு.க. வேட்பாளர் ஆர்.கே.ரவிச்சந்திரன் பேச்சு
x
தினத்தந்தி 30 March 2021 6:30 PM GMT (Updated: 30 March 2021 4:45 PM GMT)

அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அமைத்து கொடுப்பேன் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு அளிக்குமாறு அ.தி.மு.க. வேட்பாளர் ஆர்.கே.ரவிச்சந்திரன் பேசினார்.

சாத்தூர் சட்டமன்ற தொகுதியின் வெற்றி வேட்பாளர் ஆர்.கே.ரவிச்சந்திரன் இரட்டை இலை சின்னத்திற்கு சாத்தூர் நகர் பகுதிகளான குருலிங்காபுரம், அண்ணாநகர், ஆண்டாள்புரம், மேலகாந்திநகர், நடராஜா தியேட்டர் ரோடு, சங்கரேஸ்வரி காம்பவுண்டு, காமராஜபுரம், காட்டுபுதுத்தெரு, பள்ளிவாசல் தெரு ,பங்களா தெரு ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரித்த போது பேசுகையில்,

சாத்தூரில் நவீன உள்கட்ட அமைப்புடன் புதிய பேருந்து நிலையம் அமைக்கபாடுபடுவேன், உயர்த்தபட்ட கோவில் நிலங்களின் வாடகையை குறைக்க நடவடிக்கை எடுப்பேன், பொதுமக்கள், வியாபாரிகளுக்கு இடையூறு இல்லாமல் இரயில்வே மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுப்பேன், சாத்தூர் அதன் சுற்று வட்டார பகுதியில் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அமைத்து கொடுப்பேன். தங்கு தடையின்றி குடிநீர், சாலை வசதி செய்துதர நடவடிக்கை எடுப்பேன். 

பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்த நடவடிக்கை எடுப்பேன். முதல்வர் எடப்பாடியாரின் நல்ல ஆட்சி தொடர, மக்களுக்கு நல்ல திட்டங்களை மீண்டும் வழங்கிட, குடும்ப தலைவிக்கு மாதம் ரூ.1500 வழங்கிடவும், அனைத்து குடும்ப அட்டைதாரருக்கும் விலையில்லா வாஷிங்மிஷன், சோலார் சமையல் அடுப்பு வழங்கிட, சொந்த வீடு இல்லாதவர்களுக்கு இடம் வாங்கி வீடு கட்டிதர, மகளிர்சுய உதவிக்குழுக் கடன், விவசாயநகைக்கடனை தொடர் ந்து, மாணவர்களின் கல்வி கடன் ரத்து செய்ய,வீட்டில் ஒருவருக்கு அரசுபணி வழங்கிட, வருடத்திற்கு 6 சிலிண்டர் இலவசமாக வழங்கிட, இலவச அரசு கேபிள் இணைப்பு வழங்கிட இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து ஆர்.கே.ரவிச்சந்திரன் ஆன என்னை வெற்றிபெற செய்யுமாறு கேட்டு கொண்டார். 

செல்லும் இடங்கள் எல்லாம் பொதுமக்கள் அமோக வரவேற்பு கொடுத்தனர். இந்நிகழ்ச்சியில் அ.தி.மு.க. கழக நிர்வாகிகள், தொண்டர்கள். பாரதிய ஜனதா கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ், பாட்டாளி மக்கள் கட்சி, உள்ளிட்ட கூட்டணி கட்சி நகர, ஒன்றிய கழக நிர்வாகிகள், தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Next Story