தேர்தல் நுண்பார்வையாளர்களுக்கு பயிற்சி பொதுபார்வையாளர்கள் தலைமையில் நடைபெற்றது


தேர்தல் நுண்பார்வையாளர்களுக்கு பயிற்சி பொதுபார்வையாளர்கள் தலைமையில் நடைபெற்றது
x
தினத்தந்தி 30 March 2021 5:45 PM GMT (Updated: 30 March 2021 5:45 PM GMT)

தேர்தல் நுண்பார்வையாளர்களுக்கு பயிற்சி பொதுபார்வையாளர்கள் தலைமையில் நடைபெற்றது

கள்ளக்குறிச்சி

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு நுண்பார்வையாளர்கள் தேர்தல் நாளான வருகிற 6-ந் தேதி மேற்கொள்ள வேண்டிய பணிகள் மற்றும் வாக்குப்பதிவு எந்திரங்களை கையாள்வது குறித்த பயிற்சி வகுப்பு கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. இதற்கு கள்ளக்குறிச்சி, சங்கராபுரம் சட்டமன்ற தொகுதி தேர்தல் பொது பார்வையாளர் சந்திரசேகர் வாலிம்பே, உளுந்தூர்பேட்டை, ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதி தேர்தல் பொதுபார்வையாளர் இந்துமல்கோத்ரா ஆகியோர் தலைமை தாங்கி பேசியதாவது:-

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சட்டன்ற தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக தேர்தல் நாளான வருகிற 6-ந் தேதி நுண்பார்வையாளர்கள் 60 பேர் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர். இவர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் மற்றும் பொறுப்புகள் குறித்த பயிற்சி மற்றும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. நுண்பார்வையாளர்கள் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை கையாளும்போது மிக கவனத்துடனும் சிறப்புடனும் மேற்கொள்ள வேண்டும். பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட நுண்பார்வையாளர்கள் வாக்குப்பதிவு நாள் அன்று பணியை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் விஜயபாபு, கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள்(பொது) சுரேஷ், சக்திவேல் (தேர்தல்), தனி தாசில்தார் (தேர்தல்) பாலசுப்பிரமணியன் மற்றும் நுண் பார்வையாளர்கள் கலந்துகொண்டனர்.

Next Story