பென்னாகரம் அருகே சரக்கு வேன்களில் கொண்டு சென்ற ரூ.1.89 லட்சம் பறிமுதல் பறக்கும் படையினரின் வாகன சோதனையில் 178 மதுபாட்டில்கள் சிக்கின


பென்னாகரம் அருகே சரக்கு வேன்களில் கொண்டு சென்ற ரூ.1.89 லட்சம் பறிமுதல் பறக்கும் படையினரின் வாகன சோதனையில் 178 மதுபாட்டில்கள் சிக்கின
x
தினத்தந்தி 30 March 2021 6:09 PM GMT (Updated: 30 March 2021 6:12 PM GMT)

பென்னாகரம் அருகே சரக்கு வேன்களில் கொண்டு சென்ற ரூ.1.89 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். இதேபோல் மொபட்டில் கொண்டு சென்ற 178 மதுபாட்டில்கள் சிக்கின.

பென்னாகரம்,

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் தொகுதிக்கு உட்பட்ட பழையூர் சோதனைச்சாவடியில் தாசில்தார் மனோகரன் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வேனை நிறுத்தி சோதனை செய்தபோது ரூ.80 ஆயிரம் கொண்டு சென்றது தெரியவந்தது.
அதேபோல் அந்த வழியாக வந்த மற்றொரு சரக்கு வேனை நிறுத்தி சோதனை செய்தபோது ரூ.1 லட்சத்து 9ஆயிரம் கொண்டு சென்றது தெரியவந்தது. இதையடுத்து 2 சரக்கு வேன்களிலும் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ.1.89 லட்சத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து தேர்தல் நடத்தும் அலுவலர் தணிகாசலத்திடம் ஒப்படைத்தனர்.
மதுபாட்டில்கள் 
இதேபோல் பென்னாகரம் அருகே காட்டுநாயக்கனஅள்ளி பிரிவு சாலையில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த மொபட்டில் வந்தவரை நிறுத்தி பையை சோதனை நடத்தினர். அதில் மதுபாட்டில்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து மொபட்டை ஓட்டி வந்தவரிடம் பறக்கும் படையினர் விசாரணை நடத்தினர்.
அப்போது அவர் நலப்பரம்பட்டியை சேர்ந்த வைகுந்தன் (வயது 43) என்பதும், விற்பனைக்காக மதுபாட்டில்களை டாக்மாஸ் கடையில் வாங்கி சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி கொண்டு சென்ற 178 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். பின்னர் பறக்கும் படையினர், மதுபாட்டில்களை தேர்தல் நடத்தும் அலுவலர் தணிகாசலத்திடம் ஒப்படைத்தனர்.

Next Story