கொடைக்கானல் வனப்பகுதியில் பயங்கர தீ
கொடைக்கானல் வனப்பகுதியில் நேற்றிரவு பயங்கர தீவிபத்து ஏற்பட்டது.
கொடைக்கானல்:
கொடைக்கானலை அடுத்த வில்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட புலியூர், கோவில்பட்டி அருகே உள்ள தனியார் தோட்டங்கள் மற்றும் வனப்பகுதியில் நேற்று இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
கொழுந்து விட்டு எரிந்த தீயில் ஏராளமான மரங்கள் கருகின. வன விலங்குகளும் ஓட்டம் பிடித்தன.
பல ஏக்கர் பரப்பளவில் எரிந்து கொண்டிருக்கும் தீயை கட்டுப்படுத்த முடியாத நி்லை ஏற்பட்டுள்ளது. இருப்பினும் தீயை அணைப்பதற்கு வனத்துறையினர் போராடி வருகின்றனர். தற்போது சுட்டெரிக்கும் வெயில் வாட்டி வதைப்பதால் ஆங்காங்கே வனப்பகுதியில் தீ விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது.
எனவே தீத்தடுப்பு குழுக்களை அமைத்து, வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story