கடையம் அருகே புகையிலை பொருட்கள் பதுக்கிய 3 பேர் கைது


கடையம் அருகே  புகையிலை பொருட்கள் பதுக்கிய 3 பேர் கைது
x
தினத்தந்தி 30 March 2021 7:54 PM GMT (Updated: 30 March 2021 7:54 PM GMT)

கடையம் அருகே புகையிலை பொருட்கள் பதுக்கிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

கடையம்:

கடையம் அருகே உள்ள பொட்டல்புதூரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பதாக ஆழ்வார்குறிச்சி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் தலைமையில் போலீசார் சோதனை செய்தனர். அப்போது, பொட்டல்புதூரை சேர்ந்த செய்யது மசூது மகன் மீரான் மைதீன் (வயது 31) என்பவர் வீட்டில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து இருப்பது தெரியவந்தது.

இது சம்பந்தமாக அதே பகுதியை சேர்ந்த சாகுல் அமீது (41), அப்துல் லத்தீப் (39), மீரான் மைதீன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து புகையிலை பொருட்கள், கார் பறிமுதல் செய்யப்பட்டது.

Next Story