முதியவரிடம் நகை பறிப்பு


முதியவரிடம் நகை பறிப்பு
x
தினத்தந்தி 30 March 2021 8:56 PM GMT (Updated: 30 March 2021 8:56 PM GMT)

முதியவரிடம் நகை பறித்தவர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

மதுரை, 
மதுரை ஜெய்ஹிந்த்புரம் ஜீவா நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் குமாரவேல் (வயது 72). சம்பவத்தன்று இரவு இவர் வீட்டின் கதவை திறந்து வைத்து தூங்கி கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத 2 பேர் வீட்டிற்குள் புகுந்து குமாரவேலை எழுப்பினார்கள். பின்னர் அவரை சரமாரியாக தாக்கி கத்தியை காட்டி மிரட்டி அவர் அணிந்திருந்த 4 பவுன் நகையை பறித்து கொண்டு தப்பி விட்டனர். இது குறித்த புகாரின் பேரில் ஜெய்ஹிந்த்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story