மருத்துவ ஆய்வகங்களுக்கு சீல்


மருத்துவ ஆய்வகங்கள்
x
மருத்துவ ஆய்வகங்கள்
தினத்தந்தி 31 March 2021 7:43 AM IST (Updated: 31 March 2021 7:43 AM IST)
t-max-icont-min-icon

மருத்துவ ஆய்வகங்களுக்கு சீல்

பொள்ளாச்சி

பொள்ளாச்சி நகராட்சி கமிஷனர் காந்திராஜ் ஒரு அறிக்கை வெளியிட்டு உள்ளார் அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது

பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மருத்துவ ஆய்வகங்களை நகர்நல அலுவலர் ராம்குமார், தெற்கு வட்டார மருத்துவ அலுவலர் ராஜ்குமார், கொரோனா தடுப்பு டாக்டர் விஜயகுமார் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் கொண்ட குழுவினர் ஆய்வு செய்தனர். 


அப்போது நியூஸ்கீம் ரோடு மற்றும் காமராஜர் சாலையில் செயல்பட்டு வந்த 2 ஆய்வகங்களில் கொரோனா நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாதது தெரியவந்தது. இதையடுத்து அந்த ஆய்வகங்களுக்கு சீல் வைக்கப்பட்டது.

 மேலும் ஆய்வகங்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மத்திய, மாநில அரசுகளின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்கள், ஆஸ்பத்திரிகள், மருந்தகங்கள், ஆய்வகங்கள் மீது விதிமுறை மீறலுக்கு ஏற்றவாறு அபராதம் விதிக்கப்படும். மேலும் நீதிமன்ற நடவடிக்கைகளும் எடுக்கப்படும். 

தற்போது கோவை மாவட்டத்திலும், பொள்ளாச்சி நகரிலும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. பொது இடங்களிலும், பணிபுரியும் இடங்களிலும் பொதுமக்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணியவும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். கொரோனா தடுப்பு முறைகளை அனைவரும் பின்பற்றி ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story