வேடசந்தூர் தொகுதியில் விடுபட்ட பகுதிகளுக்கு குடிநீர் வழங்க ரூ.72 கோடியில் சிறப்பு திட்டம் - வி.பி.பி.பரமசிவம் எம்.எல்.ஏ. வாக்குறுதி


வேடசந்தூர் தொகுதியில் விடுபட்ட பகுதிகளுக்கு குடிநீர் வழங்க ரூ.72 கோடியில் சிறப்பு திட்டம் - வி.பி.பி.பரமசிவம் எம்.எல்.ஏ. வாக்குறுதி
x
தினத்தந்தி 31 March 2021 10:06 AM GMT (Updated: 31 March 2021 10:06 AM GMT)

வேடசந்தூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் வி.பி.பி.பரமசிவம் எம்.எல்.ஏ. நேற்று எரியோடு, நாகையகோட்டை, கோவிலூர், வெல்லம்பட்டி ஆகிய பகுதிகளுக்கு சென்று பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

வேடசந்தூர், 

மக்களின் குடிநீர் தேவைக்காக காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால் இத்திட்டத்தில் சில கிராமங்கள் விடுபட்டுள்ளன. எனவே விடுபட்ட பகுதிகளுக்கு ரூ.72 கோடியில் சிறப்பு திட்டம் மூலம் காவிரி குடிநீர் வழங்க திட்டம் உள்ளது.

அதுபோல் நமது தொகுதியில் நீர்ப்பாசன பரப்பை பெருக்கி விவசாயிகள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த மாயனூர் அணையில் இருந்து குழாய் மூலம் தண்ணீர் கொண்டு வரும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும். இதுபற்றி சட்டமன்றத்தில் வலியுறுத்தியதாலேயே ரூ.182 கோடி ஒதுக்கீடு செய்து அதற்கான அரசாணை வெளியிடப்பட்டது. 

கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றால் 100 நாள் வேலை திட்டத்தை நிறுத்திவிடுவார்கள் என்று  பொய் பிரசாரம் செய்யும் எதிர்க்கட்சிகளை நம்பாதீர்கள். அ.தி.மு.க. அரசு ஆட்சிக்கு வந்தால் தேசிய ஊரக வேலை திட்ட பணி நாட்கள் 100-ல் இருந்து 150ஆக உயர்த்த நடவடிக்கை எடுக்கும். எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்கள் பெற மீண்டும் அ.தி.மு.க.வை வெற்றிபெற செய்யுங்கள். 

இவ்வாறு அவர் பேசினார்.

பிரசாரத்தின்போது அ.தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் எஸ்.சவடமுத்து, எரியோடு நகர செயலாளர் அறிவாளி, சிறுபான்மை பிரிவு மாவட்ட துணைச்செயலாளர் ஜான்போஸ், ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் சந்திராசவடமுத்து, ஒன்றிய கவுன்சிலர்கள் காளிமுத்து, பார்த்திபன், சத்தியபிரியா பாலமுருகன், ஊராட்சி தலைவர்கள் கலைச்செல்வி தண்டபாணி, செல்வமணி நடராஜன், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தலைவர் பாஸ்கரன், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் சேட்டைகார்த்திக் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Next Story