போடி அருகே மலைக்கிராமங்களில் ஆர்வத்துடன் வாக்களித்த பழங்குடியின மக்கள்


போடி அருகே மலைக்கிராமங்களில் ஆர்வத்துடன் வாக்களித்த பழங்குடியின மக்கள்
x
தினத்தந்தி 6 April 2021 6:08 PM GMT (Updated: 6 April 2021 6:08 PM GMT)

போடி அருகே உள்ள மலைக்கிராமங்களில் பழங்குடியின மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர்.

போடி:
போடி அருகே முந்தல், சிறைக்காடு, சோலையூர், மேலப்பரவு, கீழப்பரவு உள்ளிட்ட மலைக்கிராமங்கள் உள்ளன. இங்கு பழங்குடியின மக்கள் அதிக அளவு வசித்து வருகின்றனர். இந்தநிலையில் நேற்று சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, முந்தல் மலைக்கிராமத்தில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டு இருந்தது. 
இதையடுத்து நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. அப்போது மலைக்கிராமங்களை சேர்ந்த பழங்குடியின மக்கள் சமூக இடைவெளியை பின்பற்றி, வரிசையில் காத்திருந்து ஆர்வத்துடன் வாக்களித்தனர். 
இதேபோல் கொட்டகுடி, குரங்கணி, கொழுக்குமலை, டாப்ஸ்டேஷன் போன்ற மலைக்கிராமங்களில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளில் பழங்குடியின மக்கள் வாக்களித்தனர்.

Next Story
  • chat