தென்காசி மாவட்டத்தில் 72.58 சதவீதம் வாக்குப்பதிவு


தென்காசி மாவட்டத்தில் 72.58 சதவீதம் வாக்குப்பதிவு
x
தினத்தந்தி 6 April 2021 9:26 PM GMT (Updated: 6 April 2021 9:26 PM GMT)

தென்காசி மாவட்டத்தில் 72.58 சதவீதம் வாக்குப்பதிவானது

தென்காசி, ஏப்:
தென்காசி மாவட்டத்தில் 72.58 சதவீதம் வாக்குப்பதிவானது.

வாக்காளர்கள்

தென்காசி மாவட்டத்தில் சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர், கடையநல்லூர், தென்காசி, ஆலங்குளம் ஆகிய 5 சட்டசபை தொகுதிகள் உள்ளன. சங்கரன்கோவில் தொகுதியில் 2 லட்சத்து 53 ஆயிரத்து 310 வாக்காளர்களும், வாசுதேவநல்லூர் தொகுதியில் 2 லட்சத்து 41 ஆயிரத்து 109 வாக்காளர்களும், கடையநல்லூர் தொகுதியில் 2 லட்சத்து 89 ஆயிரத்து 940 வாக்காளர்களும், தென்காசி தொகுதியில் 2 லட்சத்து 92 ஆயிரத்து 168 வாக்காளர்களும், ஆலங்குளம் தொகுதியில் 2 லட்சத்து 60 ஆயிரத்து 429 வாக்காளர்களும் உள்ளனர். 
தென்காசி மாவட்டத்தில் ஒட்டுமொத்தமாக 13 லட்சத்து 36 ஆயிரத்து 956 வாக்காளர்கள் உள்ளனர்.

தொகுதி வாரியாக வாக்குப்பதிவு சதவீதம்

இந்த தொகுதியில் நேற்று விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடந்தது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. 2 மணி நேரத்திற்கு ஒருமுறை வாக்குப்பதிவு சதவீதம் அறிவிக்கப்பட்டது.
அதன் விவரம் வருமாறு:-
சங்கரன்கோவில் தொகுதியில் காலை 9 மணி நிலவரப்படி 7.12 சதவீதமும், 11 மணிக்கு 28.09 சதவீதமும், 1 மணிக்கு 42.37 சதவீதமும், மாலை 3 மணிக்கு 54.6 சதவீதமும், 5 மணிக்கு 67.01 சதவீதமும், இரவு 7 மணிக்கு 71.47 சதவீதமும் வாக்குகள் பதிவானது.
வாசுதேவநல்லூர் தொகுதியில் காலை 9 மணிக்கு 7.81 சதவீதமும், 11 மணிக்கு 27.96 சதவீதமும், 1 மணிக்கு 44.85 சதவீதமும், மாலை 3 மணிக்கு 56.61 சதவீதமும், 5 மணிக்கு 66.66 சதவீதமும், இரவு 7 மணிக்கு 71.87 சதவீதமும் வாக்குப்பதிவானது.

கடையநல்லூர்-தென்காசி

கடையநல்லூர் தொகுதியில் காலை 9 மணிக்கு 9.66 சதவீதமும், 11 மணிக்கு 20.49 சதவீதமும், மதியம் 1 மணிக்கு 39.74 சதவீதமும், மாலை 3 மணிக்கு 53.47 சதவீதமும், 5 மணிக்கு 63.86 சதவீதமும், இரவு 7 மணிக்கு 70.6 சதவீதமும் வாக்குகள் பதிவானது.
தென்காசி தொகுதியில் காலை 9 மணிக்கு 13.1 சதவீதமும், 11 மணிக்கு 30.31 சதவீதமும், 1 மணிக்கு 45.55 சதவீதமும், மாலை 3 மணிக்கு 58.38 சதவீதமும், 5 மணிக்கு 68.18 சதவீதமும், இரவு 7 மணிக்கு 72.33 சதவீதமும் வாக்குப்பதிவானது.
ஆலங்குளம் தொகுதியில் 9 மணி நிலவரப்படி 13.1 சதவீதமும், 11 மணிக்கு 28.54 சதவீதமும், மதியம் 1 மணிக்கு 44.92 சதவீதமும், மாலை 3 மணிக்கு 59.37 சதவீதமும், 5 மணிக்கு 71.38 சதவீதமும், இரவு 7 மணிக்கு 77.40 சதவீதமும் வாக்குப்பதிவானது.
தென்காசி மாவட்டத்தில் ஒட்டு மொத்தமாக 72.58 சதவீதம் வாக்குகள் பதிவானது.

Next Story