9 சட்டமன்ற தொகுதிகளிலும் பதிவான மின்னணு எந்திரங்கள், வாக்கு எண்ணும் மையத்தில் பூட்டி `சீல்' வைப்பு;துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு


9 சட்டமன்ற தொகுதிகளிலும் பதிவான மின்னணு எந்திரங்கள், வாக்கு எண்ணும் மையத்தில் பூட்டி `சீல் வைப்பு;துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு
x
தினத்தந்தி 7 April 2021 6:56 AM GMT (Updated: 7 April 2021 6:56 AM GMT)

9 சட்டமன்ற தொகுதிகளிலும் பதிவான மின்னணு எந்திரங்கள், வாக்கு எண்ணும் மையத்தில் பூட்டி `சீல்' வைக்கப்பட்டன. அங்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


திருச்சி, ஏப்.7-
9 சட்டமன்ற தொகுதிகளிலும் பதிவான மின்னணு எந்திரங்கள், வாக்கு எண்ணும் மையத்தில் பூட்டி `சீல்' வைக்கப்பட்டன. அங்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

வாக்குப்பதிவு நிறைவு

திருச்சி மாவட்டத்தில் 9 சட்டமன்ற தொகுதிகளிலும் நேற்று நடந்த தேர்தலையொட்டி 3,292 வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்குப்பதிவு நடந்தது. திருச்சி மாவட்டத்தில் நேற்று இரவு 7 மணியளவில் வாக்குப்பதிவு முடிந்தது. மாலை 6 மணி முதல் இரவு 7 மணிவரை கொரோனா நோயாளிகள் வாக்குப்பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
வாக்குப்பதிவு முடிந்த பிறகு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை அரசியல் கட்சி முகவர்கள் முன்னிலையில் வாக்குச்சாவடி அலுவலர்கள் `சீல்' வைத்தனர்.

வாக்கு எண்ணும் மையம்

பின்னர் இரவோடு, இரவாக அந்த எந்திரங்கள் மொபைல் குழு வேன் மூலம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு தொகுதிகளில் பதிவான ஓட்டுப்பதிவு எந்திரங்கள் திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்திற்கும், மணப்பாறை, திருவெறும்பூர் மற்றும் ஸ்ரீரங்கம் ஆகிய 3 தொகுதிகளுக்கான எந்திரங்கள் திருச்சி பஞ்சப்பூரில் உள்ள சாரநாதன் பொறியியல் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்திற்கும் கொண்டு வந்து வைக்கப்பட்டது. மண்ணச்சநல்லூர், லால்குடி தொகுதிகளில் பதிவான ஓட்டுப்பதிவு எந் திரங்கள் சமயபுரம் கே.ராம கிருஷ்ணா பொறியியல் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்திற்கும், துறையூர், முசிறி தொகுதிகளில் பதிவான ஓட்டுப்பதிவு எந்திரங்கள் துறையூர் இமயம் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்திற்கும் கொண்டு வந்து வைக்கப்பட்டன.
அவ்வாறு கொண்டுவரப்பட்ட எந்திரங்கள் முறையாக சட்டமன்றத் தொகுதி வாரியாக கணினியில் பதிவுசெய்யப்பட்ட பின்னர் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டது.

‘சீல்’ வைப்பு

அதைத்தொடர்ந்து வேட்பாளர்கள் மற்றும் முகவர்களிடையே வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டுவந்து பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள விவரம் குறித்தும், பாதுகாப்பு அறைகள் பூட்டி சீல் வைக்கும் முறைகள் குறித்தும் மாவட்ட தேர்தல் அதிகாரி மற்றும் தேர்தல் பார்வையாளர்களால் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. அதன் பின்னர் வேட்பாளர்கள் அவர்களின் முகவர்கள் முன்னிலையில் வாக்குஎண்ணும் மையத்தில் உள்ள பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டு அவற்றுக்கு சீல் வைக்கப்பட்டது.

3 அடுக்கு பாதுகாப்பு

சட்டமன்றத்தொகுதி வாரியாக வாக்கு எண்ணும் அறைகள் மற்றும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கபட்ட அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளது. நேற்று நள்ளிரவு முதல் ஷிப்டு முறையில் துணை ராணுவ வீரர்கள், ஆயுதப்படை போலீசார் நியமிக்கப்பட்டனர். வாக்கு எண்ணும் மையங்கள் 24 மணிநேர மூன்றடுக்கு பாதுகாப்பு வளையத்திற்குள்ளும், கண்காணிப்பு கேமரா கண்காணிப்பிற்குள்ளும் வாக்கு எண்ணிக்கை மையங்கள் கொண்டுவரப்பட்டன.

Next Story