பா.ஜ.க. மாநில தலைவர் சாமி தரிசனம்


பா.ஜ.க. மாநில தலைவர் சாமி தரிசனம்
x
தினத்தந்தி 7 April 2021 3:13 PM GMT (Updated: 7 April 2021 3:13 PM GMT)

பழனி முருகன் கோவிலில் பா.ஜ.க. மாநில தலைவர் சாமி தரிசனம் செய்தார்

பழனி:

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்ற தொகுதியில், தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் போட்டியிட்டார். நேற்று முன்தினம் தேர்தல் நடந்து முடிந்த நிலையில், நேற்று அவர் கார் மூலம் பழனிக்கு வந்தார். 

அடிவாரத்தில் இருந்து ரோப்கார் மூலம் மலைக்கோவிலுக்கு சென்ற அவர், பூஜையில் கலந்து கொண்டு முருக பெருமானை தரிசனம் செய்தார். இதைத்தொடர்ந்து அவர் தங்கரத புறப்பாட்டில் பங்கேற்றார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது, நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி மிகப்பெரிய வெற்றிபெற்று ஆட்சியை பிடிக்கும். எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்-அமைச்சராவது உறுதியாகி விட்டது. ஆட்சியில் பங்கு பெறுவது குறித்து தலைமை முடிவு செய்யும்.

 தி.மு.க.வுக்கு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லை. அவர்கள் பணத்தை மட்டுமே நம்பி இருந்தனர். எனவே அதற்கான விடை அடுத்த மாதம் (மே) 2-ந்தேதி கிடைக்கும் என்றார்.

Next Story
  • chat