ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரிப்பு


ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரிப்பு
x
தினத்தந்தி 7 April 2021 6:03 PM GMT (Updated: 2021-04-07T23:33:07+05:30)

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரிப்பு

சராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்று இந்தமாதம் (ஏப்ரல்) 1-ந் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17-ஆக இருந்தது. அது 2-ந் தேதி 32 ஆகவும், 5-ந் 33 ஆகவும் உயர்ந்தது. இந்த நிலையில் நேற்று 39 ஆக உயர்ந்துள்ளது.

இவ்வாறு கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பொதுமக்களிடையே அச்சம் எழுந்துள்ளது. இந்த நிலையில் தொழில் நிமித்தமாக வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் வசிப்பவர்கள்  ஓட்டுப்போடுவதற்காக ஊருக்கு வந்திருந்தனர். கொரோனா தொற்று அதிகமாவதால் அவர்கள் உடனடியாக ஊர் திரும்புகின்றனர்.

Next Story