செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு ஒரே நாளில் 465 பேர் பாதிப்பு


செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு ஒரே நாளில் 465 பேர் பாதிப்பு
x
தினத்தந்தி 10 April 2021 9:52 AM IST (Updated: 10 April 2021 9:52 AM IST)
t-max-icont-min-icon

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 465 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

வண்டலூர்,

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 465 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 59 ஆயிரத்து 513 ஆக உயர்ந்துள்ளது. நேற்று சிகிச்சைப் பலனின்றி ஒருவர் உயிரிழந்தார். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 839 ஆக உயர்ந்தது.

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று 195 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரையில் மாவட்டம் முழுவதும் 47 ஆயிரத்து 704 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் இதுவரையில் 721 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பால் இறந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் 2 பேர் இறந்து உள்ளனர்.

காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 153 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 31 ஆயிரத்து 555 ஆக உயர்ந்துள்ளது. நேற்று சிகிச்சைப் பலனின்றி ஒருவர் உயிரிழந்தார். இதனால் காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 465 ஆக உயர்ந்துள்ளது.


Next Story