மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதல்: அச்சக ஊழியர் பலி
திருவாரூரில் மோட்டார் சைக்கிளின் மீது வேன் மோதியதில் அச்சக ஊழியர் உயிரிழந்தார்.
திருவாரூர்,
திருவாரூர் அருகே உள்ள தப்பளாம்புலியூர் பகுதியை சேர்ந்தவர் கணேஷ் (வயது 19). இவர் திருவாரூரில் உள்ள தனியார் அச்சகத்தில் வேலை பார்த்து வருகிறார். சம்பவதன்று இரவு வேலை முடித்து விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.
பரிதாப சாவு
நாகை பைபாஸ் சாலையில் சென்ற போது எதிரே சிமெண்டு மூட்டைகள் ஏற்றி வந்த வேன் கணேஷ் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் படுகாயம் அடைந்த கணேசை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி கணேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து திருவாரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story