போலீஸ்காரரை தாக்கிய போதை ஆசாமி கைது
சென்னையை அடுத்த கானத்தூர் போலீஸ் நிலையத்தில் குற்றப்பிரிவு போலீஸ்காரராக பணியாற்றுபவர் சதீஷ்குமார்.
ஆலந்தூர்,
சென்னையை அடுத்த கானத்தூர் போலீஸ் நிலையத்தில் குற்றப்பிரிவு போலீஸ்காரராக பணியாற்றுபவர் சதீஷ்குமார் (வயது 28). இவர் நேற்று முன்தினம் இரவு போலீஸ் நிலையம் அருகே உள்ள ஒரு டீக்கடைக்கு சென்று உள்ளார். அப்போது அங்கு குடிபோதையில் இருந்த ஒரு வாலிபர் தகராறு செய்ததை பார்த்த போலீஸ்காரர் சதீஷ்குமார் தட்டிக் கேட்டார்.
இதில் ஆத்திரமடைந்த போதை வாலிபர், சதீஷ்குமாரரை சரமாரியாக தாக்கி உள்ளார். இதில் போலீஸ்காரர் சதீஷ்குமாரின் இடது கை முறிந்தது. இது பற்றி தகவல் அறிந்த கானத்தூர் போலீசார் காயமடைந்த போலீஸ்காரர் சதீஷ்குமாரை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் குடிபோதையில் காவலரை தாக்கிய அதே பகுதியைச் சேர்ந்த ஹரிஹரன் (28) என்பவரை கைது செய்து ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story