50 சதவீத சமூக இடைவெளியுடன் திருவிழா நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி: ஒலி, ஒளி அமைப்பு தொழிலாளர் சங்கத்தினர் கலெக்டரிடம் கோரிக்கை மனு


50 சதவீத சமூக இடைவெளியுடன் திருவிழா நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி: ஒலி, ஒளி அமைப்பு தொழிலாளர் சங்கத்தினர் கலெக்டரிடம் கோரிக்கை மனு
x
தினத்தந்தி 20 April 2021 1:12 AM GMT (Updated: 20 April 2021 1:12 AM GMT)

50 சதவீத சமூக இடைவெளியுடன் திருவிழா நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி: ஒலி, ஒளி அமைப்பு தொழிலாளர் சங்கத்தினர் கலெக்டரிடம் கோரிக்கை மனு.

திருவள்ளூர், 

தமிழ்நாடு ஒலி, ஒளி அமைப்பு தொழிலாளர் நலச்சங்கத்தின் திருவள்ளூர் மாவட்ட தலைவர் ரங்கநாதன் தலைமையில், 100-க்கும் மேற்பட்டோர் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று திரண்டு வந்து, மாவட்ட கலெக்டர் பா.பொன்னையாவிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.

அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

தற்போது கொரோனா வைரஸ் அதிகமாக பரவி வருவதால் தமிழக அரசு சில கட்டுப்பாடுகள் அறிவித்த நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட திருவிழா நிகழ்ச்சிகளில் ஒலி, ஒளி அமைத்தல், பந்தல் மேடை மற்றும் டெக்கரேஷன் தொழில் செய்து வருபவர்கள் பாதிக்கப்படுகிறோம்.

எனவே திருவிழா நிகழ்ச்சிகளில் வண்ண விளக்குகள், கட்அவுட், ஒலி, ஒளி அமைக்க குறைந்தபட்சம் 50 சதவீத அரசு அறிவித்த சமூக இடைவெளியுடன் நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி அளித்து தங்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டு இருந்தது.

மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர், அதன் மீது தக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

Next Story