தண்ணீர் பாய்ச்ச முடியாததால் காய்ந்து வரும் விவசாய பயிர்கள்


தண்ணீர் பாய்ச்ச முடியாததால் காய்ந்து வரும் விவசாய பயிர்கள்
x
தினத்தந்தி 27 April 2021 7:49 PM GMT (Updated: 27 April 2021 7:49 PM GMT)

திருமழபாடியில் மின்மாற்றி சீரமைப்பு பணி நிறைவு பெறாததால், தண்ணீர் பாய்ச்ச முடியாத நிலையில் விவசாய பயிர்கள் காய்ந்து வருகின்றன.

கீழப்பழுவூர்:

சீரமைப்பு பணி
அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட திருமழபாடி கிராமத்தில் திருமானூர் செல்லும் சாலையின் இடையே மின்மாற்றி உள்ளது. இந்த மின்மாற்றியில் இருந்து மின் மோட்டார்களுக்கு மின்வினியோகம் செய்யப்பட்டு, விவசாய பணிகளுக்கு தண்ணீர் பாய்ச்ச பயன்படுத்தப்படுகிறது. இதன்படி அந்த பகுதியில் நூறு ஏக்கருக்கு மேல் கரும்பு, நெல், உளுந்து, எள் உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த 3-ந் தேதி அந்த மின்மாற்றி மீது லாரி மோதியதில் முற்றிலுமாக சேதமடைந்தது. இதையடுத்து சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. ஆனால் இந்த பணிகள் நிறைவு பெறவில்லை.
சாலை மறியலில்...
இதனால் விவசாய பயிர்களுக்கு நீர்ப்பாய்ச்ச முடியாமல் பயிர்கள் காய்ந்து வருவதாக விவசாயிகள் வருத்தத்துடன் தெரிவித்தனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, அந்த மின்மாற்றியை விரைந்து சீரமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
 மேலும் தாமதமானால் விவசாயிகள் ஒன்றிணைந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

Next Story