வீடுகளுக்கே சென்று மாணவர் சேர்க்கை
மாணவர்கள் வீடுகளுக்கே சென்று மாணவர் சேர்க்கை நடைபெற்றது
அரவக்குறிச்சி
அரவக்குறிச்சி அருகே அ.வெங்கடாபுரத்தில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. கொரோனா காரணமாக ஓராண்டுக்கும் மேலாக அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் மூடப்பட்டு உள்ளன. இந்தநிலையில் அ.வெங்கடாபுரம் அரசு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சாகுல்அமீது மற்றும் ஆசிரிய- ஆசிரியைகள் மாணவ-மாணவிகளின் வீடு தேடிச்சென்று மாணவர் சேர்க்கை பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது அவர்கள் மாணவ-மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர்களிடம் வெளியில் செல்லும்போது முக கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். வெளியிடங்களுக்கு சென்று விட்டு வீடு திரும்பியதும் கிருமி நாசினி அல்லது சோப்பு மூலம் கைகளை நன்றாக கழுவ வேண்டும் என்று விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகின்றனர். ஆசிரியர்களின் இந்த முயற்சிக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story