சிறுமி, தாய், பாட்டி ஒன்றாக தற்கொலை


சிறுமி, தாய், பாட்டி ஒன்றாக தற்கொலை
x
தினத்தந்தி 27 April 2021 8:08 PM GMT (Updated: 27 April 2021 8:08 PM GMT)

சிறுமி, தாய், பாட்டி என ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பெண்கள் தற்கொலை செய்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

காரியாபட்டி, 
சிறுமி, தாய், பாட்டி என ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பெண்கள் தற்கொலை செய்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தாய்-சிறுமி
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள முஸ்டக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் முத்துசாமி. அவருைடய மனைவி முனியம்மாள் (வயது 45).
இவர்களுடைய மகன்கள் முத்துமணி (21), மதன்குமார் (18), மகள் ஜெயலலிதா (16).
முனியம்மாளின் கணவர் முத்துசாமி கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். அவருைடய மகன்கள் 2 பேரும் வெளியூரில் வேலை செய்து வருகின்றனர்.
பிணமாக கிடந்த பாட்டி
 முனியம்மாள் பெட்டி கடை வைத்து நடத்தி வந்தார். இவரது பக்கத்து வீட்டில் முனியம்மாளின் தாயார் அடைக்கலமும் (65) வசித்து வந்தார்.
நேற்று காலை அடைக்கலம் தனது வீட்டின் முன்பு கட்டிலில் படுத்திருந்தார். காலை வெகுநேரமாகியும் அவர் எழுந்திருக்காததால் அக்கம்பக்கத்தினர் அருகே சென்று பார்த்தபோது, அடைக்கலம் பிணமாக கிடந்தது தெரியவந்தது.
ஒன்றாக தற்கொலை 
 இந்த தகவலை அடைக்கலத்தின் மகள் முனியம்மாளிடம் சொல்வதற்காக அக்கம்பக்கத்தினர் சென்று முனியம்மாள் வீட்டுக்கதவை தட்டினர். அப்போது கதவு திறக்காததால் சந்தேகப்பட்டு கதவை உடைத்து திறந்து பார்த்த போது அங்கு முனியம்மாளும், ஜெயலலிதாவும் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். 
அவர்களின் அருகே பூச்சிக்கொல்லி மருந்து பாட்டில்கள் கிடந்தன. அப்போதுதான் அடைக்கலம், அவருடைய மகள் முனியம்மாள், பேத்தி ஜெயலலிதா ஆகியோர் விஷம் குடித்து தற்கொலை செய்தது ெதரியவந்தது. 
போலீசார் விசாரணை 
இதுகுறித்து கிராம மக்கள், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். ஆவியூர் போலீசாரும், அருப்புக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சகாய ஜோஸ், காரியாபட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், முனியம்மாள் வீட்டில் குடும்ப பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. எனவே அதன் காரணமாக 3 பேரும் தற்கொலை செய்தார்களா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிைடயே பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. 

Related Tags :
Next Story