அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பு
ஸ்ரீவில்லிபுத்தூர் மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அருவிகளில் நீர்வரத்து அதிகரித்து உள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள செண்பகத்தோப்பு மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் ஏராளமான அருவிகள், நீரோடைகள் உள்ளன. இந்தநிலையில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதன் எதிரொலியாக மேற்கு தொடர்ச்சி அடிவார உள்ள பகுதியில் உள்ள கண்மாய்கள், குளங்கள் நிரம்பின. ஓடைகள், நீர் வீழ்ச்சிகள் ஆகியவற்றில் தண்ணீர் வரத்து தொடங்கியது.
இந்தநிலையில் தொடர்ச்சியாக மழை இல்லாததாலும், கொளுத்தும் வெயில் காரணமாகவும் கடந்த ஒரு மாதமாக மீன் வெட்டி பாறை அருவி, சறுக்கு பாறை அருவி மற்றும் ஓடைகள் ஆகியவற்றில் தண்ணீர் குறைந்து ஒரு மாதமாக தண்ணீர் இல்லாத நிலை நீடித்து வந்தது. இந்தநிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பரவலாக பெய்த மழையின் காரணமாக தற்போது அருவிகளில் தண்ணீர் வரத்து ெதாடங்கி உள்ளது. அந்த வகையில் மினி குற்றாலம் என அழைக்கப்படும் மீன் வெட்டி பாறை அருவியில் தற்போது தண்ணீர் கொட்ட தொடங்கி உள்ளது.
இதனால் சில ஓடைகளில தண்ணீர் வருகிறது. ஒரு மாத இடைவெளியில் மீண்டும் அருவிகள் மற்றும் ஓடையில் தண்ணீர் வருவதால் விவசாயிகளும், மலைவாழ் மக்களும் மகிழ்ச்சியில் உள்ளனர். ஆனால் அருவியில் குளிக்க அனுமதி இல்லை என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story