கோழிகளில் வெப்ப அயற்சியை தவிர்க்க குடிநீரில் எலுமிச்சை சாற்றை சேர்த்து வழங்கலாம் - ஆராய்ச்சி நிலையம் தகவல்


கோழிகளில் வெப்ப அயற்சியை தவிர்க்க குடிநீரில் எலுமிச்சை சாற்றை சேர்த்து வழங்கலாம் - ஆராய்ச்சி நிலையம் தகவல்
x
தினத்தந்தி 27 April 2021 9:10 PM GMT (Updated: 27 April 2021 9:19 PM GMT)

கோழிகளில் வெப்ப அயற்சியை தவிர்க்க குடிநீரில் நெல்லி, மோர் அல்லது எலுமிச்சை சாற்றை சேர்த்து வழங்கலாம் என வானிலை ஆராய்ச்சி நிலையம் அறிவுறுத்தி உள்ளது.

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (புதன்கிழமை) முதல் 3 நாட்களுக்கு நிலவும் வானிலை குறித்து கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் வெளியிடப்பட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- 
இன்று முதல் 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இல்லை. அடுத்த 3 நாட்களுக்கு மணிக்கு 6 கி.மீட்டர் வேகத்தில் தெற்கு திசையில் இருந்து காற்று வீசும். வெப்பநிலையை பொறுத்தவரையில் அதிகபட்சமாக 98.6 டிகிரியாகவும், குறைந்தபட்சமாக 78.8 டிகிரியாகவும் இருக்கும். மேலும் காற்றின் ஈரப்பதம் அதிகபட்சமாக 70 சதவீதமாகவும், குறைந்தபட்சமாக 40 சதவீதமாகவும் இருக்கும்.

சிறப்பு வானிலையை பொறுத்தவரை இன்று முதல் 3 நாட்களுக்கு நாமக்கல் மாவட்டத்தில் வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படுவதோடு, சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கோழிகளில் வெப்ப அயற்சியை தவிர்க்க குடிநீரில் நெல்லி, மோர் அல்லது எலுமிச்சை சாற்றை சேர்த்து வழங்கலாம். மேலும் கோடை காலத்தில் நுண்ணுயிர் சுமையை குறைக்க 1,000 லிட்டர் தண்ணீரில் 8 மில்லி ஹைட்ரஜன் பெராக்சைடை கலந்து கொடுக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story