சேலம் மாவட்டத்தில் இதுவரை 3 லட்சத்து 21 ஆயிரத்து 159 பேர் கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர்


சேலம்  மாவட்டத்தில் இதுவரை 3 லட்சத்து 21 ஆயிரத்து 159 பேர் கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர்
x
தினத்தந்தி 28 April 2021 12:07 AM GMT (Updated: 28 April 2021 12:07 AM GMT)

சேலம் மாவட்டத்தில் இதுவரை 3 லட்சத்து 21 ஆயிரத்து 159 பேர் கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர்.

சேலம்:
சேலம் மாவட்டத்தில் இதுவரை 3 லட்சத்து 21 ஆயிரத்து 159 பேர் கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர்.
கொரோனா பாதிப்பு
சேலம் மாவட்டத்தில் கொரோனா 2-வது அலை பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மாவட்டத்தில் தினமும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நேற்று வரை மாவட்டத்தில் கொரோனாவுக்கு 500 பேர் பலியாகி உள்ளனர்.
மாவட்டத்தில் அரசு, தனியார் ஆஸ்பத்திரிகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகின்றன. கொரோனா பாதிப்பு அதிகரிப்பதால் தற்போது பொதுமக்கள் தடுப்பூசி போடுவதற்கு அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
தடுப்பூசி
கொரோனா தடுப்பூசி போடுவதற்காக அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பொதுமக்கள் கூட்டம் அதிகளவு காணப்படுகிறது. ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு வரும் பொதுமக்கள் முககவசம் அணிந்து கொண்டு வந்தாலும் அங்கு அவர்கள் சமூக இடைவெளியை பின்பற்றாமல் நிற்பதை பார்க்க முடிகிறது.
எனவே அங்கு சமூக இடைவெளியை பின்பற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். சேலம் மாவட்டத்தில் நேற்று வரை 3 லட்சத்து 21 ஆயிரத்து 159 பேர் தடுப்பூசி போட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story