கொரோனா பரவல் காரணமாக திறக்க தடை விதிக்கப்பட்ட பெரிய கடைகள் எவை? தமிழக அரசு விளக்கம்
கொரோனா பரவல் காரணமாக திறக்க தடை விதிக்கப்பட்ட பெரிய கடைகள் எவை? தமிழக அரசு விளக்கம்.
சென்னை,
தமிழக அரசின் தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன், அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-
கொரோனா பரவல் அதிகரித்தது தொடர்பாக, அனைத்து பெரிய கடை நிறுவனங்கள் கடந்த 26-ந்தேதியில் இருந்து இயங்குவதற்கு அனுமதிக்கப்பட மாட்டாது என்று அரசு கடந்த 24-ந்தேதி உத்தரவு பிறப்பித்தது. மிகப்பெரிய கடைகள் என்று எந்த கடைகளை குறிப்பிட வேண்டும் என்று கலெக்டர்கள் பலர் சந்தேகங்களை எழுப்பி அரசுக்கு கடிதம் எழுதி இருந்தனர்.
இந்த சந்தேகங்களுக்கு அரசு தற்போது விளக்கம் அளிக்கிறது. அதன்படி, 3 ஆயிரம் சதுர அடி மற்றும் அதற்கு மேல் அளவுள்ள ஷோரூம் கொண்ட கடைகள் அனைத்தும் பெரிய அளவிலான கடைகள் என்று கருதப்படும் என்று விளக்கம் அளிக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story