கோவில்பட்டியில் மினி பஸ்களில் முககவசம் அணியாத 20 பேருக்கு அபராதம்


கோவில்பட்டியில் மினி பஸ்களில் முககவசம் அணியாத 20 பேருக்கு அபராதம்
x
தினத்தந்தி 28 April 2021 1:00 PM GMT (Updated: 28 April 2021 1:00 PM GMT)

கோவில்பட்டியில், மினி பஸ்களில் முககவசம் அணியாத 20 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

கோவில்பட்டி:
கோவில்பட்டியில் கொரோனா 2வது அலை வேகமாக பரவி வருகிறது. இதை யொட்டி நகரசபை ஆணையாளர் ராஜாராம் மினி பஸ்களில் திடீர் ஆய்வு நடத்த உத்தரவிட்டார்.
அண்ணா பஸ் நிலையத்தில் நகரசபை சுகாதார ஆய்வாளர் சுரேஷ் தலைமையில் சுகாதார பணியாளர்கள் மினி பஸ்களில் சோதனை நடத்தினார்கள். அப்போது முககவசம் அணியாமல் பயணம் செய்த 20 பயணிகளுக்கு தலா ரூ.200 வீதம் அபராதம் விதிக்கப்பட்டது.

Next Story