போலீசாருக்கு மூலிகை தேநீர் வினியோகம்


போலீசாருக்கு மூலிகை தேநீர் வினியோகம்
x
தினத்தந்தி 28 April 2021 9:37 PM IST (Updated: 28 April 2021 9:37 PM IST)
t-max-icont-min-icon

கம்பத்தில் போலீசாருக்கு மூலிகை தேநீர் வினியோகம் செய்யப்பட்டது.

தேனி : 

தேனி மாவட்டம் கம்பத்தில் கொரோனா பரவலை தடுக்க போலீசாருக்கு மூலிகை தேநீர் வழங்கும் நிகழ்ச்சி கம்பம் வடக்கு போலீஸ் நிலையம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. 

நிகழ்ச்சிக்கு திண்டுக்கல் சரக போலீஸ் டி.ஐ.ஜி. முத்துச்சாமி தலைமை தாங்கி, போலீசாருக்கு மஞ்சள், சுக்கு, அதிமதுரம், சித்தரத்தை, கடுக்காய், திப்பிலி, ஓமம், கிராம்பு, மிளகு ஆகியவற்றால் தயார் செய்யப்பட்ட மூலிகை தேநீரை வழங்கினார்.  

இதனை தொடர்ந்து சித்த மருத்துவர் கலையமுதன் மூலிகை தேநீர் தயாரிப்பது குறித்தும், மூலிகை தேநீரின் பயன்கள் குறித்தும் விளக்கி கூறினார். 

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய் சரண் தேஜஸ்வி, உத்தமபாளையம் போலீஸ் துணை சூப்பிரண்டு சின்னக்கண்ணு மற்றும் போலீசார் கலந்துகொண்டனர்.

Next Story