உடுமலை அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் நேற்று கோவிட்ஷீல்டு 2-வது டோஸ் மட்டும் போடப்பட்டது. தடுப்பூசி போட்டுக்கொள்ள பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.


உடுமலை அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் நேற்று கோவிட்ஷீல்டு 2-வது டோஸ் மட்டும் போடப்பட்டது. தடுப்பூசி போட்டுக்கொள்ள பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.
x
தினத்தந்தி 28 April 2021 4:15 PM GMT (Updated: 28 April 2021 4:15 PM GMT)

உடுமலை அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் நேற்று கோவிட்ஷீல்டு 2வது டோஸ் மட்டும் போடப்பட்டது. தடுப்பூசி போட்டுக்கொள்ள பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.

உடுமலை
உடுமலை அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் நேற்று கோவிட்ஷீல்டு 2-வது டோஸ் மட்டும் போடப்பட்டது. தடுப்பூசி போட்டுக்கொள்ள பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.
கொரோனா வைரஸ்
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்குதலின் 2-வது அலையின் வேகம் அதிகரித்துள்ளதால், பொதுமக்கள் கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து தங்களை தற்காத்துக்கொள்வதற்கு அரசு பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்களை செய்து வருகிறது. அதன்படி பொதுமக்கள் அவசியமின்றி வீட்டை விட்டு வெளியில் வரவேண்டாம் என்றும், அவசிய வேலையாக வெளியில் வந்தாலும் கண்டிப்பாக முககவசம் அணிந்து வரும்படியும் வலியுறுத்தி வருகிறது.
இதன் தொடர்ச்சியாக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து உடுமலை அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போடுவதற்காக தனி வார்டு அமைக்கப்பட்டு கடந்த ஜனவரி மாதம்16ம்தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கப்பட்டன. இந்த நிலையில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து உடுமலை அரசு மருத்துவமனைக்கு கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வரும் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
தட்டுப்பாடு
ஆனால் கடந்த சில நாட்களாக அடிக்கடி கொரோனா தடுப்பூசி மருந்து இல்லாமல் தட்டுப்பாடு நிலவி வருகிறது.பொதுமக்கள் அரசு மருத்துவ மனைக்கு வந்து கொரோனா தடுப்பூசி மருந்து வந்துவிட்டதா என்று விசாரித்து செல்கின்றனர். கொரோனா தடுப்பூசி மருந்து குறைந்த அளவே வருவதாக கூறப்படுகிறது. அதுவும் ஒரே நாளில் முடிந்து விடுவதாகவும், அடுத்து வந்ததும்மீண்டும் தடுப்பூசி போடப்படுவதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் உடுமலை அரசு மருத்துவமனைக்கு நேற்று கோவி ஷீல்டு மருந்து மட்டும் வந்திருந்தது. இதன்மூலம் கொரோனா தடுப்பூசி 2-வது டோஸ் போட வேண்டியவர்களுக்கு மட்டுமே போடப்பட்டது. இந்த கோவி ஷீல்டு தடுப்பூசி 2-வது டோஸ் போடுவதற்காக பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. பொதுமக்கள் வரிசையாக வந்து தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு வசதியாக மருத்துவமனை நிர்வாகத்தின் அறிவுரைப்படி மருத்துவ மனை ஊழியரால் டோக்கன் வழங்கப்பட்டது.
2-வது டோஸ்
அந்த வரிசை எண்படி நேற்று 100 பேருக்கு 2-வது டோஸ் தடுப்பூசி போடப்பட்டது. நேற்று  கோவேக்சின் இல்லை என்றும், கோவி ஷீல்டு 2-வது டோஸ் மட்டுமே போடப்படும் என்றும் எழுதி சுவற்றில் ஒட்டி வைக்கப்பட்டிருந்தது. அதனால் பொதுமக்கள் பலர் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

Next Story