மில் தொழிலாளியை கரம் பிடித்த இளம்பெண்


மில் தொழிலாளியை கரம் பிடித்த இளம்பெண்
x
தினத்தந்தி 28 April 2021 4:27 PM GMT (Updated: 28 April 2021 4:27 PM GMT)

மில் தொழிலாளியை கரம் பிடித்த இளம்பெண், பாதுகாப்பு கேட்டு போலீசில் தஞ்சம் அடைந்தார்.

வடமதுரை:

வடமதுரை அருகே உள்ள அய்யலூர் களர்பட்டியை சேர்ந்தவர் பிரவீன்பாண்டி (வயது 22). இவர், வடமதுரை அருகே உள்ள தனியார் மில்லில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். 

அதே மில்லில் வடமதுரை அருகே உள்ள நன்னி ஆசாரியூரை சேர்ந்த கவிதா (21) என்பவர் வேலை செய்தார். இவர்கள் 2 பேரும் ஒரே மில்லில் வேலை செய்ததால் அவர்களுக்கிடையே பழக்கம் ஏற்பட்டு, கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு இருதரப்பு பெற்றோரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் வீட்டை விட்டு வெளியேறிய காதல் ஜோடி, அய்யலூரில் உள்ள விநாயகர் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் பாதுகாப்பு கேட்டு, வடமதுரை போலீஸ் நிலையத்தில் அவர்கள் தஞ்சம் அடைந்தனர்.

 இதனையடுத்து இருதரப்பு பெற்றோரையும் அழைத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சமரசம் ஏற்படவில்லை. எனவே காதல்ஜோடியினர், மேஜர் என்பதால் அவர்கள் விருப்பப்படி வாழுமாறு போலீசார் அனுப்பி வைத்தனர்.

Next Story