மாவட்ட செய்திகள்

தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை + "||" + susaidu

தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
வீரபாண்டி
சேலம் மாவட்டம் சின்னியம்பாளையம் பகுதியை சேர்ந்த குப்பன் என்பவரின் மகன் செல்வராஜ் (வயது 38). சென்ட்ரிங் தொழிலாளி. இவர் திருப்பூர் கல்லாங்காடு 4-வது வீதியில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். குடிப்பழக்கத்துக்கு அடிமையான செல்வராஜ் தனது மனைவியுடன் அவ்வப்போது சண்டையிட்டு வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் தனது மனைவியுடன் ஏற்பட்ட சண்டையால் மனமுடைந்த செல்வராஜ் வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது பற்றிய தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வீரபாண்டி போலீசார் செல்வராஜ் உடலை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் வீரபாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. பரமத்திவேலூரில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
பரமத்திவேலூரில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
2. எஸ்.வாழவந்தியில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
எஸ்.வாழவந்தியில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
3. தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
4. நாமக்கல்லில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.