750 லிட்டர் சாராயம்-85 பிராந்தி பாட்டில்கள் பறிமுதல்


750 லிட்டர் சாராயம்-85 பிராந்தி பாட்டில்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 28 April 2021 6:00 PM GMT (Updated: 28 April 2021 6:00 PM GMT)

மயிலாடுதுறை அருகே 750 லிட்டர் சாராயம் மற்றும் 85 பிராந்தி பாட்டில்கள் பறிமுதல் செய்து, இதுதொடர்பாக வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

மயிலாடுதுறை:
மயிலாடுதுறை அருகே 750 லிட்டர் சாராயம் மற்றும் 85 பிராந்தி பாட்டில்கள் பறிமுதல் செய்து, இதுதொடர்பாக வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
சாராயம் விற்பனை
மயிலாடுதுறை அருகே திருவிளையாட்டம் பகுதியில் அதிக அளவில் சாராய விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா உத்தரவின்பேரில் தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளையராஜா தலைமையில் தனிப்படை போலீசார் மற்றும் மதுவிலக்கு போலீசார் திருவிளையாட்டத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். 
அப்போது திருவிளையாட்டம் வீரசோழனாற்று பாலம் அருகில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த நபரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர், அந்த பகுதியில் உள்ள வாய்க்காலில் புதைத்து சாராயத்தை விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
வாலிபர் கைது-சாராய கேன்கள் பறிமுதல்
இதையடுத்து புதைத்து வைத்திருந்த 750 லிட்டர் சாராய கேன்கள், சாக்கு மூட்டைகளில் வைத்திருந்த 800 சாராய பாக்கெட்டுகள், 85 பிராந்தி பாட்டில்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் அவற்றை போலீசார் மயிலாடுதுறை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதையடுத்து அமலாக்கப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, இதுதொடர்பாக ஜெயபாரதி (வயது 33) என்பவரை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தன.

Next Story